இரண்டாவது மிகப் பெரிய சிவிலியன் விருது பெறும் முன்னாள் ஜப்பான் பிரதமர் அபே

  • Tamil Defense
  • January 26, 2021
  • Comments Off on இரண்டாவது மிகப் பெரிய சிவிலியன் விருது பெறும் முன்னாள் ஜப்பான் பிரதமர் அபே

ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்சோ அபே அவர்களுக்கு நாட்டின் இரண்டாவது பெரிய சிவிலியன் விருதான பத்ம விபூசன் வழங்கி கௌரவித்துள்ளது இந்தியா.

இது தவிர வங்கதேசத்தை சேர்ந்தவரும் ,1971 வங்கதேச விடுதலை போரில் பங்கு பெற்றவருமான கலோ குவாசி சஜ்ஜாத் அலி அவர்களுக்கும்,சஞ்சிதா காதுன் (மியூசிக்காலஜிஸ்டு) அவர்களுக்கும் பத்ம ஸ்ரீ விருது வழங்கியுள்ளது.

“பைபர் ஆப்டிக்ஸ்” தொழில்நுட்பத்தின் தந்தை என போற்றப்படும் இந்திய-அமெரிக்கரான நரிந்தர் சிங் கபானி அவர்களுக்கும் பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டுள்ளது.

மூன்று பிரிவுகளாக வழங்கப்படும் பத்ம விருதுகள் நாட்டிலேயே ( பத்ம விபூசன்,பத்ம பூசன் மற்றும் பத்ம ஸ்ரீ) உயரிய பொதுமக்களுக்கான விருது ஆகும்.

முன்னாள் அஸ்ஸாம் முதல் தருண் கோகாய் மற்றும் ராம் விலாஸ் பஸ்வான் அவர்களுக்கு பத்ம பூசன் வழங்கப்படுகிறது.