முன்னாள் ஐ.எஸ்.ஐ தலைவர் ராவுக்கு பணியாற்றியது அம்பலம் !!

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ யின் முன்னாள் தலைவர் லெஃப்டினன்ட் ஜெனரல் ஆசாத் துர்ரானி நமது ராவுக்கு பணியாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இவர் மீது இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளதோடு அந்நாட்டு அரசு எக்ஸிட் கண்ட்ரோல் லிஸ்டில் இவரது பெயரை சேர்த்துள்ளது.

முன்னாள் ரா தலைவர் தவ்லத் அவர்களுடன் இணைந்து இவர் எழுதிய “ஸ்பை க்ரானிக்கிள்ஸ்” எனும் புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்த கொள்ள இருந்தார்.

ஆனால் மேற்குறிப்பிட்ட பட்டியலில் இருப்பவர்கள் தேச துரோக குற்றம் சுமத்தப்பட்டவர்கள், அவர்களை வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியாது என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.