1 min read
உக்ரைனில் இருந்து வந்த புதிய போர் கப்பல்களுக்கான என்ஜின்கள் !!
இந்தியா தனது கடற்படைக்காக ரஷ்யாவிடம் இருந்து 2 அட்மிரல் க்ரிகோரோவிச் ரக கப்பல்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த அதிநவீன ஸ்டெல்த் கப்பல்கள் ஃப்ரிகேட் ரகத்தை சேர்ந்தவை இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 2.5 பில்லியின் டாலர்கள் ஆகும்.
ரஷ்யாவின் கலினின்க்ராட் நகரத்தில் உள்ள யாந்தர் கப்பல் கட்டுமான தளத்தில் இந்த கப்பல்களின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இவற்றிற்கான என்ஜின்களை உக்ரைனில் இருந்து இந்தியா வாங்கியது, ஆனால் உக்ரைன் ரஷ்யா இடையே மோதல் உள்ள நிலையில்
என்ஜின்களை நேரடியாக ரஷ்யா அனுப்பாமல் இந்தியா வந்து பின்னர் இங்கிருந்து ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
முதலாவது கப்பல் 2022 ஆண்டின் இறுதி வாக்கிலும் இரண்டாவது கப்பல் ஆறு மாதங்கள் கழித்து 2023ஆம் ஆண்டிலும் படையில் இணைய உள்ளன.