காஷ்மீரில் என்கவுண்டர் 4 வீரர்கள் காயம், 1 வீரர் கவலைக்கிடம் !!

  • Tamil Defense
  • January 20, 2021
  • Comments Off on காஷ்மீரில் என்கவுண்டர் 4 வீரர்கள் காயம், 1 வீரர் கவலைக்கிடம் !!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூர் பகுதியில் உள்ள கோவ்ர் செக்டாரில் உள்ள ஜோக்மா கிராமம் எல்லை கட்டுபாட்டு கோடு அருகே அமைந்துள்ளது.

நேற்று இரவு இந்த பகுதி வழியாக பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 3 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றுள்ளனர்.

அப்போது காவல் பணியில் இருந்த தரைப்படை வீரர்கள் உடனடியாக பயங்கரவாதிகளுடன் சண்டையில் ஈடுபட்டனர்.

இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் 4 தரைப்படை வீரர்கள் காயம் அடைந்தனர் அதில் ஒரு வீரர் மோசமான நிலையில் உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.