
தற்போது இந்திய சீன எல்லையில் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது, இந்த சூழலில் கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் எல்லையோர தளங்களில் ஆய்வு மேற்கொண்டு உள்ளார்.
சீன எல்லையை ஒட்டியுள்ள அருணாச்சல பிரதேச மாநிலத்தின் திபாங் பள்ளதாக்கு மற்றும் லோஹித் செக்டார்களில் ஆயுவு மேற்கொண்ட அவர்,
அங்கு பணியில் உள்ள தரைப்படை, ITBP மற்றும் SFF வீரர்களை சந்தித்து பேசி உற்சாகமுட்டினார்.
மேலும் அவர் எல்லையோர விமானப்படை தளங்களையும் ஆய்வு செய்தார்.