தரைப்படை மற்றும் கடற்படைக்கு புதிய தளவாடங்களை வடிவமைத்து பரிசோதனை செய்த டி ஆர் டி ஒ !!

  • Tamil Defense
  • January 2, 2021
  • Comments Off on தரைப்படை மற்றும் கடற்படைக்கு புதிய தளவாடங்களை வடிவமைத்து பரிசோதனை செய்த டி ஆர் டி ஒ !!

இந்திய தரைப்படையின் தேவைக்கு ஏற்ப டாங்கிகள், லாரிகளின் போக்குவரத்திற்காக மூன்று புதிய வகை இயந்திரவிசை பாலங்களை டி ஆர் டி ஒ உருவாக்கி உள்ளது.

இந்த பாலங்கள் சுமார் 70 டன் வரை தாங்கும் திறன் கொண்டவையாக 5மீட்டர், 10மீட்டர் மற்றும் 15 மீட்டர் என மூன்று வகைகளாக உருவாக்கப்பட்டு உள்ளன.

மேலும் இந்திய கடற்படைக்கென SAHAYAK-NG என்ற அடுத்த தலைமுறை கண்டெய்னரையும் உருவாக்கி உள்ளது.

இந்த கண்டெய்னர்களில் மூலமாக முக்கிய கருவிகள் மற்றும் பிற சப்ளை பொருட்களை வைத்து விமானம் மூலமாக பாராசூட் வழியாக இறக்கி விட முடியும்.

கரையில் இருந்து மிக நீண்ட தொலைவில் உள்ள போர்கப்பல்களுக்கு இது அமைதிகாலம் மற்றும் போர் காலத்திலும் இந்த அமைப்பு வரப்பிரசாதம் ஆகும்.