டெசர்ட் நைட் 2021-இந்திய பிரான்ஸ் ரபேல்கள் கூட்டுப் பயிற்சி
இந்தியா மற்றும் பிரான்ஸ் விமானப்படைகள் இணைந்து ஜோத்பூரில் ஐந்து நாள் மாபெரும் போர்பயிற்சியில் ஈடுபட உள்ளன.இந்த பயிற்சியில் பிரான்ஸ் மற்றும் இந்தியாவின் ரபேல் விமானங்கள் கலந்து கொண்டு மிகக் கடினமான மேனுவர்களை பயிற்சி செய்து பார்க்க உள்ளன.இதன் மூலம் இந்திய ரபேல் விமானங்களை இயக்கும் விமானிகளுக்கு நல்ல அனுபவ பாடம் கிடைக்கும்.
டெசர்ட் நைட் 21 என இந்த பயிற்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது.இந்திய சீனப் பிரச்சனை நடந்து வரும் வேளையில் இந்த போர்பயிற்சி முக்கியத்துவம் பெறுகிறது.இந்தியா தனது அனைத்து முன்னனி வான் தளங்களையும் உட்சபட்ட தயார் நிலையில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பயிற்சியின் முக்கிய நோக்கமே ரபேலை நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்த கூடிய அளவுக்கு தாக்கும் சக்தியும் அதன் சூட்சமத்தையும் விமானிகள் பகிர்ந்து கொள்வது தான்.பிரான்ஸ் விமானிகள் ரபேல் விமானங்களை இயக்கி அளவற்ற அனுபவச் செல்வங்கள் கொண்டுள்ளனர்.இனி அந்த அனுபவம் இந்திய விமானிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.
ரபேல் விமானங்களை தவிர போக்குவரத்து மற்றும் டேங்கர் விமானங்களும் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும்.இதற்கு முன் கருடா என்ற பெயரில் இரு நாடுகளும் பல வருடங்களாக பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இந்தியா கடந்த வருடம் ஜீலை மாதம் முதல் தொகுதி Rafale jet பெற்றது.இந்த ரபேல் விமானங்கள பிரான்சின் Dassault Aviation நிறுவனம் தயாரிக்கிறது.