இந்தியாவில் ரஃபேல் விமானங்களை தயாரிக்க டஸ்ஸால்ட் நிறுவனம் விருப்பம் !!

  • Tamil Defense
  • January 8, 2021
  • Comments Off on இந்தியாவில் ரஃபேல் விமானங்களை தயாரிக்க டஸ்ஸால்ட் நிறுவனம் விருப்பம் !!

இந்தியாவிலேயே ரஃபேல் விமானங்களை தயாரிக்க டஸ்ஸால்ட் நிறுவனம் விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியா வந்துள்ள ஃபிரெஞ்சு அதிபரின் ஆலோசகர் இம்மானுவேல் போன் இந்த விஷயம் பற்றி இந்திய அரசிடம் முன்மொழிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது நூறு அல்லது அதற்கு நெருங்கிய எண்ணில் இந்தியா ரஃபேல் விமானங்களை வாங்க விரும்பினால் இந்தியாவிலேயே தயாரித்து கொடுக்க விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.