
முதல் முறையாக மத்திய ரிசர்வ் காவல்படை தனது கோப்ரா படையில் பெண்களை இணைக்க திட்டமிட்டு உள்ளது, இவர்கள் உளவு அடிப்படையிலான பணிகளை மேற்கொள்வர்.
இது குறித்து மத்திய ரிசர்வ் காவல்படை தலைவர் ஏ பி மகேஸ்வரி கூறுகையில் பெண்கள் ஏற்கனவே சிறப்பாக செயல்படுவதாகவும், தற்போது அவர்களை கோப்ரா படைகளில் இணைக்க உள்ளதாகவும் கூறினார்.
கோப்ரா படையினர் பெரும்பாலும் நக்சல்பாரி பகுதிகள், வட கிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீரில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.