கொரோனா தடுப்பூசிகளை தனது முன்கள பணியாளர்களுக்கு செலுத்தும் ராணுவம் !!

  • Tamil Defense
  • January 17, 2021
  • Comments Off on கொரோனா தடுப்பூசிகளை தனது முன்கள பணியாளர்களுக்கு செலுத்தும் ராணுவம் !!

நேற்று நாடு முழுவதும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது.இதில் முப்படைகளும் பங்கேற்றுள்ளனர், ராணுவத்தின் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் சுமார் 3300க்கும் அதிகமான ராணுவ மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் நர்சிங் அசிஸ்டென்டுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.இந்திய தரைப்படையில் சுமார் 3,129 பேருக்கு தடுப்பூசி இடப்பட்டு உள்ளது, விமானப்படையை பொறுத்தவரை சரியான எண்ணிக்கை வெளியாகவில்லை.

கடற்படையை பொறுத்தவரை 250 பேருக்கு தடுப்பூசி இடப்பட்டு உள்ளது. மும்பை ஐ.என்.ஹெச்.எஸ். அஸ்வினி கடற்படை மருத்துவமனையின் கட்டளை அதிகாரியான சர்ஜியன் ரியர் அட்மிரல் ஷீலா மாத்தாய்.கொச்சி தளத்தில் அமைந்துள்ள ஐ.என.ஹெச்.எஸ். சஞ்சீவனி கடற்படை மருத்துவமனையில் சர்ஜியன் ரியர் அட்மிரல் ஆர்த்தி சரின் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் தடுப்பூசி போட்டு கொண்டனர்.

மூத்த அதிகாரிகள் மற்றும் பல்வேறு மட்டத்தில் மருத்துவராக பணியிற்றும் அதிகாரிகளும் முன்னுதாரணமாக தடுப்பூசி போட்டு கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.