லடாக்கில் சீன ராணுவ வீரர் கைது !!

லடாக்கின் சுஷூல் செக்டாரில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரர் ஒருவர் இந்திய வீரர்களால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

விசாரணைக்கு பின்னர் அவரை சீன ராணுவத்திடம் ஒப்படைக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இப்படி பிடிபட்ட சீன வீரர் விசாரணைக்கு பின்னர் சீன படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.