இரண்டாவது டைப்075 நிலநீர் தாக்குதல் ஹெலிகாப்டரை சோதனை செய்யும் சீனா !!

  • Tamil Defense
  • January 5, 2021
  • Comments Off on இரண்டாவது டைப்075 நிலநீர் தாக்குதல் ஹெலிகாப்டரை சோதனை செய்யும் சீனா !!

கடந்த ஏப்ரல் மாதம் சீனா இரண்டாவது டைப்075 கப்பலை கட்டி முடித்தது, தற்போது அதன் கடல் சோதனைகளை துவங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த கப்பலை சீனாவின் மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனமான ஹூதோங்-ஜாங்குவா கட்டியுள்ளது, இந்நிறுவனம் உலகிலேயே இரண்டாவது பெரிய கப்பல் கட்டுமான நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகை கப்பல்கள் அமெரிக்க கடற்படையின் வாஸ்ப் ரக நிலநீர் போர்முறை கப்பல்களுக்கு இணையானவை என குறிப்பிடப்படுகிறது.

டாங்கிகள், கவச வாகனங்கள், மரைன் வீரர்கள், ஹெலிகாப்டர்கள் என ஒரு பெரும் படையணி இக்கப்பல்களில் இருந்து இயங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.