தைவான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் சீன விமானப்படை தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவி உள்ளதாகவும்,
8 குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் 4 போர் விமானங்கள் அடங்கிய அந்த படையணி வான் பாதுகாப்பு எல்லையை தாண்டி விட்டதாகவும்,
தற்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தைவானுக்கு மிக அருகே அமெரிக்க விமானந்தாங்கி கப்பலான தியோடர் ருஸ்வெல்ட் இருப்பதால் சிறிது முரட்டுத்தனம் காண்பிக்க சீனா இதனை செய்து இருக்கலாம் என கருதப்படுகிறது.