
பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி இன்று தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய விமானப்படைக்கான தேஜாஸ் போர் விமான ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்தது.
அதன்படி சுமார் 48,000 கோடி ருபாய் மதிப்பில் 83 தேஜாஸ் போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளன, 73 தேஜாஸ் மார்க் 1ஏ போர் விமானங்களும் , 10 தேஜாஸ் மார்க்1 போர் விமானங்களும் வாங்கப்பட உள்ளன.
இந்த போர் விமானத்தில்
FLYBY WIRE
MID AIR REFUELLING
BVR
Electronic Warfare Suite
AESA RADAR
உள்ளிட்ட பல அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ளன.
இவை இந்திய விமானப்படையின் மிக்21 விமானங்களுக்கு மாற்றாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.