இந்தியா பிரெஞ்ச் போர்பயிற்சி-டெசர்ட் நைட்

  • Tamil Defense
  • January 24, 2021
  • Comments Off on இந்தியா பிரெஞ்ச் போர்பயிற்சி-டெசர்ட் நைட்

ஜோத்பூரில் தற்போது நடைபெற்று வரும் டெசர்ட் நைட் போர்பயிற்சியை இந்திய விமானப்படை தளபதி நேரில் சென்று பார்த்துள்ளார்.அவருடன் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் அவர்களும் கண்டுகளித்தார்.

இரு நாட்டு விமானப்படை வீரர்களையும் சந்தித்து பேசிய தளபதி நான்கு நாட்களில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒருங்கிணைப்பு தன்மை குறித்தும் பயிற்சி குறித்தும் கேட்டறிந்துள்ளார்.

இந்த பயிற்சியில் முதன் முறையாக விமானப்படையின் ரபேல் விமானங்கள் கலந்து கொண்டுள்ளன.இவை தவிர மிராஜ் மற்றும் சுகாய் விமானங்களும் கலந்து கொண்டுள்ளன.