கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியா

கேப்டன் குர்பச்சன் சிங் அவர்கள் 29 நவம்பர் 1935ல் சுதந்திரத்திற்கு முன்பான பஞ்சாபின் ஷாகர்கர் என்னுமிடத்திற்கு அருகே உள்ள ஜம்வால் கிராமத்தில் முன்ஷி ராம் மற்றும் தான் தேவி இணையருக்கு மகனாக பிறந்தார்.அதன் பிறகு குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜங்கல் கிராமத்திற்கு அவரது குடும்பம் இடம்பெயர்ந்தது.

பெங்களூருவில் உள்ள கிங் ஜார்ஜ் ராயல் இந்தியன் மிலிட்டரி காலேஜில் 1946ல் இணைந்தார்.அதன் பிறகு ஜலந்தரில் உள்ள ராயல் மிலிட்டரி காலேஜில் இணைந்தார்.

அதன் பின் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைந்து அதன் பின் இந்தியன் மிலிட்டரி அகாடமியில் இணைந்தார்.அதன் பின் 1957ல் வீரத்திற்கு பெயர் போன 1 கூர்கா ரைபிள்சில் இணைந்தார்

காங்கோவில் இருந்த ஐநா பாதுகாப்பு படையின் இந்தியப் படையில் இடம்பெற்றார் குர்பச்சன் அவர்கள்.1960 முதல் 1964 வரையிலும் இந்த நடவடிக்கை தொடர்ந்தது.இந்த நடவடிக்கையின் குறிக்கோள் காங்கோவில் இருந்து பெல்ஜியன் படைகள் பாதுகாப்பாக வெளியேறுவதை உறுதிப்படுத்துவது, மக்கள் போர் நடைபெறாமல் தடுப்பது மற்றும் ஐநாவின் கீழ் வராத படைகளை வெளியேற்றுவது போன்றவை ஆகும்.

இதற்காக இந்தியா 99 இன்பான்ட்ரி பிரிகேடை மார்ச் 1961ல் அனுப்பியது.கேப்டன் குர்பச்சன் சிங் அவர்களின் 3/1 கோர்கா ரைபிள்ஸ் படைப்பிரிவும் இந்த பிரிகேடில் இடம்பெற்றிருந்தது.

1961 டிசம்பரில் கடாங்கா மகாணத்தில் இருந்த எலிசபெத்வில்லெ கிராமத்தில் அமைந்த ஐநா கட்டளையகத்தில் கேப்டன் சலாரியா அவர்களின் 3/1 கூர்கா படைப் பிரிவு நிறுத்தப்பட்டிருந்தது.அங்கு ஒரு வான்தளத்தில் போராளிகளால் வைக்கப்பட்டிருந்த சாலை அடைப்புகளை வெளியேற்றும் பணி கேப்டன் சலாரியா அவர்களின் படைக்கு வழங்கப்பட்டது.

எலிசபெத்வில்லே அருகே இருந்த அந்த வான்தளத்தை 16 வீரர்கள் மற்றும் 3 இன்ச் மோர்ட்டார்கள் உதவியுடன் கேப்டன் சலாரியா அவர்கள் தாக்கி கைப்பற்றி அங்கு ஐநா படை சார்பாக தடையை ஏற்படுத்தினார்.ஆனால் கேப்டன் சலாரியாவின் படைக்கு போராளி குழுக்கள் மிகுந்த சவாலாக விளங்கியது.தானியங்கி ஆயுதங்கள் மற்றும் கவச வாகனங்களின் உதவியோடு 90 போராளிகள் தாக்க தொடங்கினர்.

எண்ணிக்கையில் எதிரிகள் அதிகமிருந்தாலும் கேப்டன் சலாரியா அவர்களை எதிர்க்க முன்வந்தார்.

“ஜெய் மகாகாளி அயோ கூர்காளி” என்ற போர்குரலோடு ” கோழையாக இருப்பதை விட இறப்பதே மேல்” என்ற ரெஜிமென்டின் கொள்கையோடு எதிரிகளை நேரடியாக சந்தித்தார்.

மிகக் குறைந்த நேரத்திலேயே எதிரிகளை மிக குறைந்த தூர போர்முனையில் சந்தித்து அடித்து துவம்சம் செய்தார்.உட்சபட்ச வீரத்தோடும் வேகத்தோடும் போரிட்ட வேளையில் எதிரியின் தானியங்கி தோட்டா ஒன்று அவரது கழுத்துப்பக்கத்தை தாக்கியதில் அவர் கீழே விழுந்தார்.

போரில் ஏற்பட்ட அதீத காயம் காரணமாக அவர் வீரமரணம் அடைந்தார்.அவரது துணிச்சல் மற்றும் மற்ற வீரர்களின் அர்பணிப்பு காரணமாக மொத்த போராளி படையும் சிதறடிக்கப்பட்டது.

கேப்படன் சலாரியா அவர்கள் போரில் காட்டிய வீரம் காரணமாக அவருக்கு மிக உயரிய இராணுவ விருதான பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

ஐநா ஆபரேசன்களில் கலந்து உயரிய விருது பெற்ற ஒரே வீரர் இவர் தான்.

வீரவணக்கம்
@இந்தியஇராணுவச்செய்திகள்