
பொருளாதார நெருக்கடி காரணமாக பாதுகாப்பு துறையின் பட்ஜெட்டும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இந்திய கடற்படை குறைந்த எண்ணிக்கையில் தளவாடங்களை பெற விரும்புகிறது.
அந்த வகையில் 57 கடற்படை போர் விமானங்கள் பெற விரும்பிய நிலையில் தற்போது 34 போதும் எனவும்,
24 கடற்கண்ணிவெடி போர்முறை கப்பல்களை வாங்க விரும்பிய நிலையில் அது 12 ஆக சுருங்கி தற்போது 8 கப்பல்கள் போதும் எனவும்,
10 பி8ஐ நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை மற்றும் கண்காணிப்பு விமானங்கள் தேவை என்ற நிலையில் இருந்து தற்போது 6 போதும் எனவும்,
மேலும் 2 ஹெலி கேரியர் கப்பல்கள் போதும் எனவும் இந்திய கடற்படை முடிவு செய்துள்ளது.