
மேற்கு வங்க மாநிலம் ஆங்க்ரெய்ல் கிராமம் வங்கதேச எல்லையோரம் அமைந்துள்ளது.
இந்த பகுதி எல்லை பாதுகாப்பு படையின் 158ஆவது பட்டாலியனுடைய கட்டுபாட்டின் கீழ் வருகிறது.
நேற்று கிடைத்த ரகசிய தகவலின்படி எல்லையோரம் வீரர்கள் சோதனை நடத்தினர் அப்போது தங்கம் கடத்தி வந்த பெண் ஒருவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து சுமார் 4கிலோ 300 கிராமுக்கும் அதிகமான 37 தங்க பிஸ்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.