காஷ்மீரில் 7-8 வருட பழைய சுரங்கம் பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிப்பு !!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு பகுதியின் கத்துவா மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் சுரங்கம் ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர்.

சுமார் 2-3 அடி விட்டம் கொண்ட இந்த சுரங்கம் 30அடி ஆழத்தில் சுமார் 175மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த சுரங்கத்தின ஆரம்ப பகுதி பாகிஸ்தான் காவல் சாவடிகள் அருகே உள்ளது, ஆகவே பயங்கரவாதிகளுக்கு பாக் உதவி இருப்பதை மறுக்க முடியாது.

மேலும் இதன் கட்டுமானம் எளிதில் சாத்தியம் இல்லை நிச்சயமாக பாக் உதவியிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஜம்மு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 6ஆவது சுரங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.