
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரம்பான் பகுதியில் உள்ள கேலா மோர் எனும் பகுதி வழியாக ஜம்மு ஶ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
இந்த பகுதியில் உள்ள பாலம் நிலச்சரிவு காரணமாக சேதமடைந்த நிலையில் ஒரு வாரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் எல்லையோர சாலைகள் அமைப்பிடம் இப்பாலத்தை சீர்செய்யும் பணி ஒப்படைக்கப்பட்டது.
60 மணி நேரத்திலேயே 110அடி நீளம் கொண்ட பாலம் நிர்மானிக்க பட்டு சோதனை ஒட்டமும் நிறைவு பெற்று போக்குவரத்து அனுமதிக்கபட்டு உள்ளது.