
72வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய அரசு முதல் முறையாக 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சண்டை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே ஜீன் 15,2020ல் நடைபெற்ற சண்டையில் இந்தியா 20வீரர்களை இழந்தது.சீனா சார்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் சீனா தகவல்கள் ஏதும் வெளியிடவில்லை.
கலோனல் சந்தோஷ் பாபு ,கமாண்டிங் அதிகாரி ,16வது பீகார் அவர்களுக்கு மகாவீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.
ஆபரேசன் ஸ்னோ லெபர்ட் நடவடிக்கையின் போது கலோனல் சந்தோஷ் அவர்களின் படைப்பிரிவு கல்வானில் ஒரு கண்காணிப்பு நிலையை ஏற்படுத்த பணிக்கப்பட்டது.இந்த நிலையின் மூலமாக எதிரி நடவடிக்கைகளை கண்கானிக்க முடியும்.
தனது திட்டத்தை தனது வீரர்களுக்கு எடுத்துரைத்து ஒரு கண்காணிப்பு நிலையை வெற்றிகரமாக ஏற்படுத்தினார் கலோனல் சந்தோஷ்.அந்த நிலையை காவல் காத்து வரும் வேளையில் எதிரியின் எதிர்ப்பை படைப்பிரிவு சந்தித்தது.திடீரென கூரிய ஆயுதங்கள் மற்றும் கற்கள் மூலம் நமது வீரர்களை சீனப் படையினர் தாக்க தொடங்கினர்.
நமது வீரர்களை விட அதிக வீரர்களுடன் சீன வீரர்கள் தாக்க தொடங்கினர்.இந்திய வீரர்களை பின்னுக்கு தள்ள தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் சீன படையினர் மேற்கொண்டனர்.ஆனால் அவர்களின் முயற்சியை இந்திய வீரர்கள் தடுத்தனர்.
வீரத்திற்கும் சிறந்த தலைமைக்கும் எடுத்துக் காட்டாக கலோ பாபு அவர்கள் படுகாயமடைந்த போதும் முன்னனியில் இருந்து சண்டையிட்டு தனது வீரர்களுக்கு உத்தரவுகள் பிறப்பித்து கொண்டிருந்தார்.எதிரிகளின் எந்த சவாலையும் தடுத்தனர் நமது வீரர்கள்.கையால் அடுத்து சண்டையிட தொடங்க தனது கடைசி மூச்சு வரை எதிகளுடன் போரிட்டார் கலோ பாபு அவர்கள்.இதன் மூலம் உத்வேகம் அடைந்த வீரர்கள் எதிரி படைகளுக்கு எதிராக மிக ஆக்ரோசமாக மோதி நிலையை விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டனர்.
தற்போது அவருக்கு மகா வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.