
BEML என்பது புகழ்பெற்ற பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று என்பது தெரிந்ததே, இந்த நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளது.
அந்த ஒப்பந்தத்தின் படி இந்திய தரைப்படைக்கு சுமார் 758கோடி ருபாய் செலவில் அதிநவீன அதிக திறன் வாய்ந்த லாரிகளை தயாரித்து வழங்க வேண்டும்.
இந்த வாகனங்கள் கவச வாகனங்கள், வீரர்கள், ஆயுதங்கள் மற்றும் சப்ளைகளை எல்லைக்கு மிக கடினமான நிலப்பரப்பிலும் சுமக்கும் வகையில் இருத்தல் வேண்டும் என்பது நிபந்தனை ஆகும்.