
நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சி.ஆர்.பி.எஃப படையுடன் இணைந்து பைக் ஆம்புலன்ஸ் ஒன்றை வடிவமைத்து உள்ளது.
ரக்ஷிதா என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆம்புலன்ஸ் காயமடைந்த வீரர்களை உடனடியாக மீட்க உதவும்.
வாகனங்கள் செல்ல முடியாத சாலை வசதிகளற்ற காட்டு பகுதியில் இந்த பைக் ஆம்புலன்ஸ் பேருதவி ஆக அமையும்.