
நேற்று அமெரிக்க செனட் சபையில் பேசிய ஜெனரல் லாய்டு ஜே ஆஸ்டின் இந்தியாவுடன் பாதுகாப்பு உறவை மேம்படுத்த விரும்புவதாக கூறியுள்ளார்.
மேலும் இந்திய மற்றும் அமெரிக்க ராணுவங்கள் இணைந்து செயல்பட நிறைய இடம் உள்ளதாகவும்,
க்வாட் (Quad) அமைப்பை வலுப்படுத்த இந்தியவுடனான ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இவர் அமெரிக்காவின் அடுத்த பாதுகாப்பு செயலாளர் ஆக பரிந்துரை செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.