இந்திய கடற்படைக்கு புதிய லேசர் கருவிகளை விற்கும் பெல் நிறுவனம் !!

பெல் நிறுவனம் வெற்றிகரமாக இந்தியாவிலேயே முழுவதும் தயாரான லேசர் டேஸ்லர் கருவிகளை இந்திய கடற்படைக்கு வழங்க உள்ளது.

இவை தாக்குவதற்கு உபயோகப்படாது ஆனால் இதிலிருந்து வரும் லேசர் ஒளிக்கதிர்கள் பாய்ச்சப்படும் பகுதியில் உள்ள நபர்களின் பார்வை திறன்களை தற்காலிகமாக பாதிக்கும்,

அதாவது அதிக வெளிச்சத்தை பார்த்தால் என்ன நடக்குமோ அந்த விளைவு ஏற்படும்.

இதன்மூலம் அத்துமீறி நுழையும் கப்பல்கள், படகுகள், ட்ரோன்கள் ஆகியவற்றை நிறுத்தி முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.