எந்தநேரத்திலும் செயல்பட தயாராக இருங்கள்-சீனப்படைகளுக்கு ஷின்பிங் உத்தரவு

முழு அளவில் எதற்கும் தயாராகவும், எந்த நொடியிலும் செயல்பட தயாராக இருக்குமாறும் சீனத் தலைவர் க்சி சின்பிங் தனது இராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உண்மையான போருக்கு ஏற்றவாறு உண்மையான போர் பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு ஷின்பிங் உத்தரவிட்டுள்ளார்.எந்த நேரத்திலும் செயல்படும் அளவில் எப்போதும் தயாராக இருக்குமாறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

2021ல் தனது படைகளுக்கு முதல் கட்டளையாக இதனை பிறப்பித்துள்ளார்.இது தவிர ஸ்புங்குர் கேப் மற்றும் பங்கோங் ஏரி பகுதிகளில் சீனா அதிக அளவிலான படைகளை தற்போது குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முக்கியமான தொழில்நுட்பங்களை பயிற்சிகளின் போது பயன்படுத்தி அவற்றை உண்மையான போரில் பயன்படுத்தி கொள்ள தங்களை தயார் படுத்தி கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார்.