
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26ஆம் தேதி தலைநகர் தில்லியில் பிரமாண்ட குடியரசு தின அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம்.
இந்த அணிவகுப்பில் பல்வேறு ராணுவ படை பிரிவுகள், கலாச்சார வாகனங்கள் பங்கேற்பது வழக்கம், மேலும் கடந்த சில வருடங்களாக சில வெளிநாட்டு படைகளும் அணிவகுப்பது வழக்கம்.
அந்த வகையில் இந்த வருடம் நமது அண்டை நாடான வங்கதேசத்தின் தரைப்படை அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது.
அவர்கள் வழக்கமாக பயன்படுத்தும் “பிடி-08” ரக துப்பாக்கியுடன் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.