திருச்சி ஆயுத தொழிற்சாலை தயாரித்த “குழந்தை ஏகே47” !!

  • Tamil Defense
  • January 27, 2021
  • Comments Off on திருச்சி ஆயுத தொழிற்சாலை தயாரித்த “குழந்தை ஏகே47” !!

திருச்சி ஆயுத தொழிற்சாலை இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ஆயுதம் தயாரித்து வழங்கும் மிக முக்கியமான தொழிற்சாலைகளில் ஒன்று.

தற்போது இவர்கள் குழந்தை ஏகே47 துப்பாக்கியை தயாரித்துள்ளனர், அளவில் மிக சிறியதாக இருக்கும் இதனை எளிதில் மறைத்து கொண்டு செல்ல முடியும்.

மிக நெருக்கமான பகுதிகளில் சண்டையிட தேவைமான அளவில் இருப்பதோடு மட்டுமில்லாமல் ஏகே47ன் தாக்குதல் திறனையும் கொண்டிருக்கும்.

இந்த துப்பாக்கி தற்போது ராணுவத்திடம் சோதனைக்காக ஒப்படைக்கப்பட்டு உள்ளதது, சுமார் 2000 தோட்டாக்கள் வரை எவ்வித சிக்கலும் இன்றி சுட முடிந்திருக்கிறது.

இந்த துப்பாக்கியில் பிக்கடன்னி ரெயில் வசதி உள்ளதால் டார்ச், ஹோலோக்ராஃபிக் சைட், ரெட் டாட் சைட் போன்றவற்றை இணைத்து பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.