
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷம்ஸிபோரா பகுதியில் உள்ள சுபன்போராவில் ராணுவத்தினர் சோதனை நடத்தினர்.
அதாவது ராணுவ கான்வாய் செல்லும் முன் சாலைகளில் வெடிகுண்டு உள்ளிட்டவற்றவை வைக்கப்பட்டு இருக்கிறதா என சோதனை நடத்தப்படும் அந்த பணியை வீரர்கள் மேற்கொண்டு இருந்தனர்.
அப்போது பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது கையெறி வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் 24ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படையணியை சேர்ந்த 4 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.