கார்கிலில் புதிய கிராமம் கட்டமைக்க 375 ஏக்கர் ராணுவ நிலம் சிவில் நிர்வாகத்திற்கு பரிமாற்றம் !!

  • Tamil Defense
  • January 20, 2021
  • Comments Off on கார்கிலில் புதிய கிராமம் கட்டமைக்க 375 ஏக்கர் ராணுவ நிலம் சிவில் நிர்வாகத்திற்கு பரிமாற்றம் !!

தெற்கு கார்கில் பகுதியில் புதிய டவுன் ஒன்றை கட்டமைக்க கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக அம்மாநில அரசு இந்திய தரைப்படையுடன் பேசி வந்தது.

இதன் பலனாக அடுத்த ஆறு மாதங்களில் தரைப்படை தனது கட்டுபாட்டில் உள்ள 375 ஏக்கர் நிலத்தை சிவில் நிர்வாகத்திற்கு பரிமாற்றம் செய்யும், இதற்கு ஈடாக ராணுவத்திற்கு வேறு நிலம் வழங்கப்படும்.

இதற்கான ஒப்பந்தம் லடாக் தன்னாட்சி மலைப்பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் மற்றும் கார்கில் துணை ஆணையருமான திரு. பஸீர் உல் ஹக் சவுதரி மற்றும்

தரைப்படையின் 121ஆவது காலாட்படை ப்ரிகேடின் தலைமை அதிகாரி ப்ரிகேடியர் விவேக் பக்ஷி ஆகியோரால கையெழுத்து இடப்பட்டது.

மேற்குறிப்பிட்ட நிலம் தரைப்படையால் பல்வேறு பயிற்சி மற்றும் தரைப்படை செயல்பாடுகளுக்காக பயன்படுத்தி வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.