
1) MH-60 ரோமியோ
2.6 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட 24 ஹெலிகாப்டர்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது.
பழைய சீ கிங் ரக ஹெலிகாப்டர்களை இவை மாற்ற உதவும், முதல் தொகுதி ஹெலிகாப்டர்கள் இந்த வருடம் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2) P15 B நாசகாரிகள்
விசாகப்பட்டினம் ரக நாசகாரி போர்க்கப்பல்களில் முதலாவதான விசாகப்பட்டினம் தற்போது கடல் சோதனைகளில் உள்ளது.
ஐ.என்.எஸ் விசாகப்பட்டினம் இந்த வருடம் படையில் இணைய உள்ளது.
3) ஐ.என்.எஸ் அரிகாட் நீர்மூழ்கி
அரிஹந்த் ரகத்தை சேர்ந்த இரண்டாவதும் கடைசியுமான நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். அரிகாட் இந்த வருடம் படையில் இணைய உள்ளது.
இது பன்னிரண்டு “K15” அல்லது நான்கு “K4” அணு ஆயுத ஏவுகணைகளை சுமக்க வல்லது.
4) இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்
இந்திய விமானப்படை ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
15 ஹெலிகாப்டர்களை உடனடியாக டெலிவரி செய்ய முடியும் என ஹெச்.ஏ.எல் நிறுவனம் கூறியுள்ளது.
5) S400
இந்த வருடம் S400 டெலிவரி தொடங்க உள்ளது, இந்த ஒப்பந்தம் 5.4 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.