அமெரிக்க கடற்படை தனது பழைய டி45 கோஷாவ்க் பயிற்சி விமானங்களை மாற்ற விரும்புகிறது.
இதற்கான போட்டியில் ஏற்கனவே நமது தேஜாஸூம் இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்க கடற்படையின் வான் தொழில்நுட்ப கட்டளையகம் தேஜாஸ் குறித்த கேள்வி பட்டியலை அனுப்பி இருந்தது.
நமது ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்த கேள்விகளுக்கு பதில்களை அனுப்பி வைத்து உள்ளது என பாதுகாப்பு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.