இந்தியாவுக்கு எஃப்15 விற்க அமெரிக்க அரசின் அனுமதி பெற்ற போயிங் நிறுவனம் !!

  • Tamil Defense
  • January 30, 2021
  • Comments Off on இந்தியாவுக்கு எஃப்15 விற்க அமெரிக்க அரசின் அனுமதி பெற்ற போயிங் நிறுவனம் !!

இந்திய தனது விமானப்படைக்கு சுமார் 114 பல்திறன் போர் விமானங்களை வாங்க விரும்புகிறது.

இந்த பிரமாண்ட ஒப்பந்தத்தை பெற பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.

ஏற்கெனவே ஃபிரெஞ்சு டஸ்ஸால்ட் (Dassault aviation)நிறுவனமும், சுவீடனின் சாப் (Saap) நிறுவனமும் போட்டியில் உள்ள நிலையில்,

அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தனது எஃப்15 இ.எக்ஸ் (F-15EX) ரக போர் விமானத்துடன் போட்டியில் இணைந்துள்ளது.

ஏற்கனவே லாக்ஹீட் மார்ட்டின் தனது எஃப்21 (F-21) போர் விமானத்துடன் போட்டியில் இருப்பதும்,

இந்திய விமானப்படை தளபதி ரஃபேல் போர் விமானம் பலம் வாய்ந்த நிலையில் இருப்பதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.