
ரஷ்யாவுடனான S-400 ஒப்பந்தம் நிறைவு பெற்றால் உறுதியாக இந்தியா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் ட்ரம்பின் நிர்வாகம் S-400 ஒப்பந்தத்தை இந்தியா கைவிட வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில்,
சில நாட்களில் பதவியேற்க உள்ள பைடன் நிர்வாகம் ரஷ்யாவுக்கு எதிராக அதி தீவிரமாக செயல்படும் என கூறப்படுகிறது.
மேலும் க்ரைமியாவை ரஷ்யா எடுத்துக்கொண்ட பிறகு அமெரிக்கா இயற்றிய சட்டம் ரஷ்யா மீதும் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் நாடுகள் மீதும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்கிறது.
ஆகவே இச்சட்டத்தில் இருந்து இந்தியா அல்ல வேறு எந்த நாட்டுக்கும் சிறப்பு விலக்கு அளிக்கப்படாது என அந்நாட்டு அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக இந்தியா தனது தேவைகளை நிறைவேற்றி கொள்ள தனக்கு முழு உரிமை இருப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.