
லிபியாவில் இருந்து ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பை நைசாக அமெரிக்கா சுருட்டிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது லிபியாவில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் துருக்கி ஆதரவு பெற்ற அரசுக்கு எதிராக முன்னாள் லிபிய ராணுவ தளபதியான ஜெனரல் கலிஃபா ஹஃப்தார் தலைமையில் சண்டை நடைபெற்று வருகிறது .
இவரது படையினருக்கு ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, ரஷ்யா ஆகிய நாடுகள் நேரடியாகவும் இஸ்ரேல் மறைமுகமாகவும் உதவி வருகின்றன.
அந்த வகையில் இவரது படைகளுக்கு ரஷ்ய தயாரிப்பு வான் பாதுகாப்பு அமைப்பான பான்ட்ஸிர் சிலவற்றை ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியது.
கடந்த வருடம் ஜூன் மாதம் சண்டையில் கைவிடப்பட்ட இத்தகைய பான்ட்ஸிர் அமைப்பினை அமெரிக்கா தனது சி17 விமானத்தை அனுப்பி லிபியாவில் இருந்து சுருட்டி கொண்டது தற்போது அம்பலமாகி உள்ளது.
இது அமெரிக்க ராணுவத்திற்கு புதிதல்ல இப்படி பிறநாட்டு ஆயுதங்களை கொண்டு சென்று பிரித்து மேய்வதும் அவற்றை கொண்டு படையினருக்கு பயிற்சி அளிப்பதும், பலவீனங்களை கண்டுபிடிப்பதும் வாடிக்கையான நிகழ்வாகும்.