சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மீது தற்காலிக தடை விதித்த அமெரிக்கா !!

அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற ஒரு வார காலத்திற்குள் அதிபர் பைடன் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மீது தற்காலிக தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ட்ரம்ப் அதிபராக இருக்கும் போது சவுதி அரேபியாவுக்கு அதிநவீன குண்டுகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 50 எஃப்35 போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் விற்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனையடுத்து அப்போது ஜனநாயக கட்சியினர் இந்த ஒப்பந்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் ஆனால் செனட்டில் முடக்க முடியவில்லை.

இந்த ஒப்பந்தங்கள் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான பின் செயல்படுத்தப்பட்டவை ஆகும்

தற்போது தடை விதிக்கப்பட்ட நிலையில் அமைதி ஒப்பந்தத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.