இந்தியா ஏகே-203 துப்பாக்கியை இரஷ்யாவின் அனுமதி பெற்று தயாரிப்பை தொடங்க உள்ளது.இந்த AK-203 தாக்கும் துப்பாக்கிகள் உத்திர பிரதேசத்தின் கோர்வாவில் தயாரிக்கப்படும்.
ஒப்பந்தம் தொடர்பாக கலாஷ்நிகோவ் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தளபதி நரவனே அவர்கள் கூறியுள்ளார்.
ஒப்பந்தம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் பேசி சுமூகமாக முடிக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலைக்கு சென்றுள்ளதாக இரஷ்ய பக்கமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் படா இந்தியா கிட்டத்தட்ட 671,427 AK-203 துப்பாக்கிகளை தயாரிக்கும்.அனுமதி பெற்று தயாரிக்கப்படும் ஒரு AK-203 துப்பாக்கியின் விலை 70 ஆயிரம் ரூபாய் ( $958) ஆக இருக்கும்.
AK-203 ஒரு 7,62×39 mm ரக தாக்கும் துப்பாக்கி ஆகும்.இதற்கு முன்பிருந்த ஏகே துப்பாக்கிகளை விட இந்த துப்பாக்கி நவீனமானது ஆகும்.நவீன பார்க்கும் கருவிகளை இதில் பொருத்த முடியும். optical மற்றும் optoelectronic பார்க்கும் கருவிகள், thermal imaging மற்றும் collimator பார்க்கும் கருவிகளை பொருத்த முடியும்.
200-ரக ஏகே துப்பாக்கிகளின் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுவது அதன் துல்லியமாக சுடும் திறன் மேம்படுத்தப்பட்டது தான்.