சியாச்சின், லடாக் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் படையினருக்கு நவீன பொருட்கள் !!

  • Tamil Defense
  • January 11, 2021
  • Comments Off on சியாச்சின், லடாக் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் படையினருக்கு நவீன பொருட்கள் !!

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஒரு பிரிவு டிபாஸ் ஆகும்.

இந்த அமைப்பு சியாச்சின் வீரர்களுக்காக அலோக்கல் க்ரீம் என்ற க்ரீமை தயாரித்து உள்ளது.

இந்த க்ரீம் பனியின் காரணமாக ஏற்படும் ஃப்ராஸ்ட் பைட், சில ப்ளேய்ன்ஸ் உள்ளிட்ட நோய்களை தடுக்க உதவும்.

நவீன தண்ணீர் பாட்டில்- இதன் உள்ளே அடைத்து வைக்கப்படும் தண்ணீரானது -50 டிகிரி குளிரிலும் உறையாது.

சோலார் பனி உருக்கும் இயந்திரம்- சூரிய சக்தியில் இயங்கும் இந்த இயந்திரம் ஒரு மணி நேரத்தில் 5 முதல் 7 லிட்டர் வரை தண்ணீரை தயாரிக்கும் ஆற்றல் கொண்டது.

நவீன வெப்ப கருவி – ஏற்கனவே ராணுவத்தால் பயன்படுத்தப்படும் புகாரி கருவியின் மேம்படுத்தப்பட்ட வடிவம் இது.

100% எரிபொருள் உபயோகம், அதிக எரிபொருள் சிக்கனம் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.

இந்த பொருட்கள் தரைப்படை, ஐ.டி.பி.பி மற்றும் சி.ஆர்.பி.எஃப் உள்ளிட்ட படைகளுக்கு வழங்கப்பட உள்ளன.