இந்திய ராணுவ அதிகாரி உருவாக்கி உள்ள நவீன ட்ரோன் !!

இந்திய தரைப்படையின் EME படைப்பிரிவை சேர்ந்த அதிகாரி லெஃப்டினன்ட் கர்னல் ஜி.ஒய்.கே. ரெட்டி ஆவார்.இவர் சமீபத்தில் தான் கண்டுபிடித்த மைக்ரோகாப்டர் ட்ரோனை தில்லியில் நடைபெற்ற ராணுவ கண்காட்சியில் அறிமுகம் செய்தார்.

இந்த ட்ரோன் கட்டிடங்களுக்குள் சென்று பணய கைதிகள், பயங்கரவாதிகளின் மறைவிடங்களை கண்டுபிடிக்க வல்லது. மேலும் சுமார் இரண்டு மணி நேரம் வரை தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது.

இந்த ட்ரோன் ஏற்கனவே காஷ்மீரில் பாரா சிறப்பு படைகளால் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக தரைப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.