
யுனைடெட் சர்வீஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இந்தியா எனும் அமைப்பு இந்திய பாதுகாப்பு படையினரின் நலன்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் நிறுவனம் ஆகும்.
இந்த அமைப்பு சார்பில் கர்னல் ஏ.கே. மோர் தலைமையில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி இந்திய ராணுவ வீரர்களில் 50% க்கும் அதிகமானோர் தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என கூறப்படுகிறது.
நீண்ட காலமாக பயங்கரவாத எதிர்ப்பு போரில் பங்கெடுப்பது, குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பது, பொருளாதார மற்றும் குடும்ப பிரச்சினைகள் உள்ளிட்டவை முக்கிய காரணிகளாக கூறப்படுகின்றன.
இந்த பிரச்சினை வீரர்களின் உற்சாகத்தை பாதிப்பதாகவும், பயிற்சி, தளவாடங்கள் பராமரிப்பு , ஒழுக்கம் ஆகியற்றிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அதை போல இடைநிலை அதிகாரிகள் மட்டத்திலும் கடுமையான பாதிப்புகள் உள்ளது, அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இடையே பாலமாக இருக்கும் இடைநிலை அதிகாரிகள் (சுபேதார் மேஜர் உள்ளிட்ட பதவிகள்) இரு தரப்பு உடனும் முரண்பாடு காட்டுவது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.
அதிகாரிகள் மட்டத்திலும் மிக கடுமையான பாதிப்புகள் உள்ளன, அளவுக்கு அதிகமான பணிச்சுமை, படைகளை வழிநடத்த போதிய வசதிகள் இல்லாமை ஆகியவை அவர்களின் தலைமை பண்பை பாதிப்பதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் 100க்கும் அதிகமான அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை நிலவுகிறது.