கல்கத்தாவில் உள்ள GARDEN REACH SHIPBUILDERS & ENGINEERS Ltd பொதுத்துறை கப்பல் கட்டுமான நிறுவனம் இந்திய கடற்படைக்கு 8ஆவது களமிறக்கும் கப்பலை நேற்று டெலிவரி செய்தது.
இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரியர் அட்மிரல் வி கே சக்ஸேனா ” GRSE நிறுவனம் எட்டாவதும் கடைசியுமான களமிறக்கும் கப்பலை இந்திய கடற்படைக்கு டெலிவரி செய்துள்ளதாகவும்,
மேலும் இந்த கப்பல்கள் வியூக முக்கியத்துவம் வாய்ந்த அந்தமான் பகுதியில் நிலைநிறுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
இந்த வகை கப்பல்கள் அதன் ரகத்திலேயே மிகவும் தனித்துவம் மிக்கது மேலும் 900டன் எடையுடன் ஆழம் குறைந த பகுதிகளில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த கப்பல்களின் பாகங்களில் 90% இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை என்பது கூடுதல் சிறப்பு.