
இந்தியா தனது தரைப்படைக்கு சுமார் 40,000 இலகுரக இயந்திர துப்பாக்கிகளின் தேவை இருப்பதை உணர்ந்து சுமார் 16,479 LMGக்களை வாங்க இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
இந்த நிலையில் நேற்று சுமார் 6000 நெகேவ் NG7 வகை இலகுரக இயந்திர துப்பாக்கிகள் இந்தியா வந்தடைந்தன.
இவை அனைத்தும் இந்திய தரைப்படையின் வடக்கு கட்டளையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் 10,479 துப்பாக்கிகள் அடுத்தடுத்து இந்தியா வரவுள்ளன என்றும் இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 880கோடி ரூபாய் எனவும் கூறப்படுகிறது.
இந்த நெகேவ் NG7 ரக துப்பாக்கிகளில்
ஒற்றை ஒற்றையாக சுட முடியாது ஆனால் செமி – ஆட்டோ (நிமிடத்திற்கு 600 தோட்டாக்கள்) மற்றும் ஃபுல் ஆட்டோ (நிமிடத்திற்கு 750 தோட்டாக்கள்) வசதிகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.