
ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். மாதவன் சமீபத்தில் அளித்த பேட்டியில்,
வருகிற மார்ச் மாத இறுதிக்குள் 5 தேஜாஸ் போர் விமானங்கள் விமானப்படைக்கு டெலிவரி செய்யப்படும் எனவும்,
2020-2021 நிதியாண்டு முடிவு பெறுவதற்கு முன்னர் மேலும் 2 விமானங்கள் டெலிவரி செய்யப்படும் என்றார்.
மேலும் பேசுகையில் 2021-22 நிதியாண்டில் 8 தேஜாஸ் போர் விமானங்களை டெலிவரி செய்ய திட்டம் உள்ளதாகவும் கூறினார். ஆனால் சில தகவல்களின் படி தற்போது இரண்டாவது தயாரிப்பு நிலையம் இயக்கத்தில் இல்லை ஆகவே 2022-23 வாக்கில் தான் இரண்டாவது தயாரிப்பு மையத்தின் டெலிவரி துவங்கும் என கூறப்படுகிறது.
பெங்களூர் மையம் முதல் கட்டமாக 10 தேஜாஸ் பயிற்சி விமானங்களை டெலிவரி செய்த பின்னர் 73 தேஜாஸ் போர் விமானங்களுக்கான பணிகளை துவங்கும் என கூறப்படுகிறது.