2 தினங்கள் முன்னர் தில்லியில் இஸ்ரேலிய தூதரகம் முன்னர் நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதற்கு பயன்படுத்தபட்ட வெடிமருந்து ராணுவ தரத்திலான பென்டாஎரித்ரிடால் டெட்ராநைட்ரேட் என தெரிய வந்துள்ளது. இந்த வகை வெடிமருந்து பெரும்பாலும் அல் காய்தா அமைப்பு பயன்படுத்த கூடியது ஆகும். மேலும் ட்ரான்ஸிஸ்டர்களுக்கான ஹைவாட் 9 வோல்ட் பேட்டரியும் கண்டு பிடிக்க பட்டுள்ளது, இவை வழக்கமாக இந்தியன் மூஜாஹீதின் மற்றும் லஷ்கர் இ தொய்பா ஆகிய அமைப்புகளால் பயன்படுத்தி […]
Read Moreஅமெரிக்க கடற்படை தனது பழைய டி45 கோஷாவ்க் பயிற்சி விமானங்களை மாற்ற விரும்புகிறது. இதற்கான போட்டியில் ஏற்கனவே நமது தேஜாஸூம் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்க கடற்படையின் வான் தொழில்நுட்ப கட்டளையகம் தேஜாஸ் குறித்த கேள்வி பட்டியலை அனுப்பி இருந்தது. நமது ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்த கேள்விகளுக்கு பதில்களை அனுப்பி வைத்து உள்ளது என பாதுகாப்பு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read Moreஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்னாக் மாவட்டத்தில் நேற்று காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது 2 பயங்கரவாதிகள் மற்றும் 4 உதவியாளர்கள் சிக்கினர், இவர்கள் ஜெய்ஷ் இ மொஹம்மது அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர். அவர்களிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள், 3 மேகஸின்கள், 116 தோட்டாக்கள், 2 க்ரெனெடுகள், 30 ஏகே47 தோட்டாக்கள் மற்றும் 1 கிலோ வெடிமருந்து ஆகியவை கைப்பற்ற பட்டன.
Read More