தில்லியில் இஸ்ரேலிய தூதகரம் அருகே நடைபெற்ற குண்டுவெடிப்பு தற்போது மி தீவிரமாக பார்க்கப்பட்டு வருகிறது. விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஜெய்ஷ் அல் ஹிந்த் எனும் இயக்கம் இதற்கு பொறுப்பேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு ஈரானியர்கள் விசாரணையில உள்ளனர். மேலும் கூடுதலாக இஸ்ரேலிய அதிகாரிகள் இந்தியா வந்து விசாரணையில் தேசிய பாதுகாப்பு முகமையுடன் இணைந்து பணியாற்ற உள்ளனர். இஸ்ரேல் ஏற்கனவே ஈரானின் கைங்கர்யம் இதற்கு பின்னால் இருப்பதாக சந்தேகிப்பது குறிப்பிடத்தக்கது.
Read Moreதில்லியில் இஸ்ரேலிய தூதரகம் முன்னர் நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இஸ்ரேலிய தூதரகம் அருகே கிடைத்த கடிதம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில் “இது ட்ரெய்லர் தான் எனவும், ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானிய தளபதி ஜெனணல் காஸெம் சொலைமானி மற்றும் ஈரானிய தலைமை அணு விஞ்ஞானி மோஹ்ஸீன் ஃபக்ரிஸாதே ஆகியோரின் மரணங்கள் குறித்தும் எழுதப்பட்டு உள்ளது. ஏற்கனவே இவர்களின் மரணங்களுக்காக ஈரான் இஸ்ரேலை விமர்சித்து வந்த […]
Read Moreமேற்கு வங்க மாநிலம் ஆங்க்ரெய்ல் கிராமம் வங்கதேச எல்லையோரம் அமைந்துள்ளது. இந்த பகுதி எல்லை பாதுகாப்பு படையின் 158ஆவது பட்டாலியனுடைய கட்டுபாட்டின் கீழ் வருகிறது. நேற்று கிடைத்த ரகசிய தகவலின்படி எல்லையோரம் வீரர்கள் சோதனை நடத்தினர் அப்போது தங்கம் கடத்தி வந்த பெண் ஒருவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் 4கிலோ 300 கிராமுக்கும் அதிகமான 37 தங்க பிஸ்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Read Moreநேற்று தலைநகர் தில்லியின் மையப்பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேலிய தூதரகம் முன்பு குண்டு வெடித்தது. மிக மிக சிறிய குண்டுவெடிப்பு ஆனாலும் இந்த விஷயம் இரு தரப்பாலும் மிக சீரியஸாக பார்க்கப்படுகிறது. நேற்று மாலை இருநாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். நேற்று இந்தியா மற்றும் இஸ்ரேல் இருதரப்பு உறவுகள் முறையாக செயலுக்கு வந்த 29ஆம் வருடம் என்பது குறிப்பிடத்தக்கது.
Read Moreஇந்திய தனது விமானப்படைக்கு சுமார் 114 பல்திறன் போர் விமானங்களை வாங்க விரும்புகிறது. இந்த பிரமாண்ட ஒப்பந்தத்தை பெற பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. ஏற்கெனவே ஃபிரெஞ்சு டஸ்ஸால்ட் (Dassault aviation)நிறுவனமும், சுவீடனின் சாப் (Saap) நிறுவனமும் போட்டியில் உள்ள நிலையில், அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தனது எஃப்15 இ.எக்ஸ் (F-15EX) ரக போர் விமானத்துடன் போட்டியில் இணைந்துள்ளது. ஏற்கனவே லாக்ஹீட் மார்ட்டின் தனது எஃப்21 (F-21) போர் விமானத்துடன் போட்டியில் இருப்பதும், இந்திய விமானப்படை தளபதி […]
Read Moreதில்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு சில கண்காணிப்பு கேமிரா காணொளிகளை கைபற்றி உள்ளது. அதில் இருவர் டாக்ஸியில் இருந்து இறங்கி குண்டு வெடித்த பகுதிக்கு சென்றது தெரிய வந்துள்ளது. டாக்ஸி ஓட்டூனர் மூலமாக இருவரது படங்களை தயார் செய்யும் பணி ஆரம்பித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read Moreஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள லெல்ஹார் பகுதியில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் நிகில் டேய்மா என்ற வீரர் வீரமரணம் அடைந்தார். 19 வயதே நிரம்பிய இந்த வீரர் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
Read Moreஇந்திய பாதுகாப்பு அமைச்சகம் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் மேற்கு சியாங் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தி உள்ளது. சுமார் 14.128 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த நிலம் எல்லையோரம் அமைந்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் இந்த இடத்தை ராணுவ முகாம் அமைக்கவும், ஸ்டோர்கள் அமைக்கவும் பயன்படுத்தி கொள்ளும். கடந்த அக்டோபர் மாதத்தில் தவாங் மாவட்டத்தில் சுமார் 200ஏக்கர் இதே காரணத்திற்காக கையகப்படுத்த பட்டது குறிப்பிடத்தக்கது.
Read More