Day: January 29, 2021

இரட்டை கோபுர தாக்குதல் பாணியில் புர்ஜ் கலிஃபாவை தகர்க்க திட்டம் : மிரட்டல் விடுத்த பயங்கரவாத குழு !!

January 29, 2021

இரட்டை கோபுர தாக்குதல் என்பது உலகை உலுக்கிய ஒரு பயங்கர நிகழ்வு அதன் பாதிப்பு இன்றளவும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. தற்போது ஈரானிய ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுவான “வாத் அல் ஹக்” புர்ஜ் கலிஃபா கட்டிடத்தை தகர்க்க மிரட்டல் விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள படத்தில் இரண்டு ட்ரோன்களை புர்ஜ் கலிஃபா கட்டிடம் மீது மோதி வெடிக்க செய்யும் காட்சி உள்ளது. இந்த மிரட்டல் மத்திய கிழக்கில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது, ஐக்கிய […]

Read More

திபெத் பற்றிய கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் ராணுவத்தின் புதிய முடிவு !!

January 29, 2021

இந்தியாவின் மேற்கு எல்லையை பெரும்பாலும் திபெத் பகிர்ந்து கொள்ள வேண்டியது ஆனால் சீனா ஆக்கிரமிப்பு காரணமாக தற்போது சீனா இந்தியாவுடன் உரசி கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணேயின் உத்தரவுபடி திபெத் பற்றிய கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க தரைப்படையின் பயிற்சி கட்டளையகம் முடிவு செய்துள்ளது. இதுபற்றி பேசிய அதிகாரிகள் கூறுகையில் சீன மொழியை கற்பதாலேயே ஒருவர் சீனாவை முழுவதும் புரிந்து கொள்ள முடியாது, தற்போது சீனாவை நன்கு புரிந்து கொண்ட அதிகாரிகள் மிகவும் […]

Read More

ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பை சுருட்டிய அமெரிக்கா; அதிர்ச்சி தகவல் !!

January 29, 2021

லிபியாவில் இருந்து ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பை நைசாக அமெரிக்கா சுருட்டிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது லிபியாவில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் துருக்கி ஆதரவு பெற்ற அரசுக்கு எதிராக முன்னாள் லிபிய ராணுவ தளபதியான ஜெனரல் கலிஃபா ஹஃப்தார் தலைமையில் சண்டை நடைபெற்று வருகிறது . இவரது படையினருக்கு ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, ரஷ்யா ஆகிய நாடுகள் நேரடியாகவும் இஸ்ரேல் மறைமுகமாகவும் உதவி வருகின்றன. அந்த வகையில் இவரது படைகளுக்கு ரஷ்ய தயாரிப்பு வான் […]

Read More

6000 இஸ்ரேலிய LMG துப்பாக்கிகள் இந்தியா வந்தன !!

January 29, 2021

இந்தியா தனது தரைப்படைக்கு சுமார் 40,000 இலகுரக இயந்திர துப்பாக்கிகளின் தேவை இருப்பதை உணர்ந்து சுமார் 16,479 LMGக்களை வாங்க இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த நிலையில் நேற்று சுமார் 6000 நெகேவ் NG7 வகை இலகுரக இயந்திர துப்பாக்கிகள் இந்தியா வந்தடைந்தன. இவை அனைத்தும் இந்திய தரைப்படையின் வடக்கு கட்டளையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 10,479 துப்பாக்கிகள் அடுத்தடுத்து இந்தியா வரவுள்ளன என்றும் இவற்றின் மொத்த மதிப்பு சுமார் […]

Read More

காஷ்மீரில் பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதி கைது !!

January 29, 2021

ஜம்மு காஷ்மீரில் பந்திபோரா காவல்துறையினர் ஒரு ஜெய்ஷ் இ மொஹம்மது பயங்கரவாதியை நேற்று கைது செய்தனர். அவனிடம் இருந்து 5 கையெறி குண்டுகள் மற்றும் 1 கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது. காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் அமைத்த சோதனை சாவடி வழியாக செல்லும் போது இவன் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

ஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டம் தயார் : இஸ்ரேலிய ராணுவ தளபதி !!

January 29, 2021

சமீபத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெனரல் அவிவ் கோச்சாவி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஏற்கனவே சில திட்டங்கள் கைவசம் உள்ளதாகவும், அவற்றுடன் புதிய சில தாக்குதல் திட்டங்களை வகுக்க படைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் பேசுகையில் எது எப்படியோ இதற்கான முடிவெடுக்கும் அதிகாரம் அரசியல் தலைமை இடம்தான் உள்ளது ஆனால் தயாராக இருப்பது எங்களது கடமை என்றார். மேலும் ட்ரம்ப் நிர்வாகம் விலக்கி கொண்ட அமெரிக்க ஈரான் […]

Read More

இந்திய தரைப்படைக்கு புதிய துணை தளபதி நியமனம் !!

January 29, 2021

இந்திய தரைப்படையின் துணை தளபதியாக லெஃப்டினன்ட் ஜெனரல் சி பி மொஹந்தி நியமிக்கப்பட்டு உள்ளார். முன்னதாக இவர் தென்னக ராணுவத்தின் தளபதியாக பணியாற்றி வந்தார். பூனே தேசிய பாதுகாப்பு அகாடமி, டேராடுன் இந்திய ராணுவ அகாடமி ஆகியவற்றில் பயிற்சி முடித்து ராஜ்புட் ரெஜிமென்ட்டில் 1982ஆம் ஆண்டு அதிகாரியாக இணைந்தார். தனது பணிக்காலத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் படைகளை பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் வழிநடத்திய அனுபவமும், சீன எல்லையோரம் ஒரு மலையக போர்முறை பிரிகேடையும் வழிநடத்திய […]

Read More

தரைப்படையின் தெற்கு கட்டளையகத்திற்கு புதிய தளபதி நியமனம் !!

January 29, 2021

இந்திய தரைப்படையின் தெற்கு கட்டளையகத்தின் புதிய தளபதியாக லெஃப்டினன்ட் ஜெனரல் ஜே.எஸ். நைன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் தேசிய பாதுகாப்பு கல்லூரி, இந்திய ராணுவ கல்லூரி ஆகியவற்றில் பயிற்சி முடித்து இந்திய தரைப்படையின் டோக்ரா ரெஜிமென்ட்டுடைய 2ஆவது பட்டாலினில் தனது ராணுவ பணியை துவக்கினார். இடைப்பட்ட காலத்தில் ஊட்டி வெலிங்டன் பாதுகாப்பு சேவைகள், பணியாளர்கள் கல்லூரி மற்றும் செகந்திராபாத் பாதுகாப்பு மேலாண்மை கல்லூரி மற்றும் டாக்கா தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றில் படிப்புகளை முடித்தவர் ஆவார். […]

Read More

சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மீது தற்காலிக தடை விதித்த அமெரிக்கா !!

January 29, 2021

அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற ஒரு வார காலத்திற்குள் அதிபர் பைடன் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மீது தற்காலிக தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ட்ரம்ப் அதிபராக இருக்கும் போது சவுதி அரேபியாவுக்கு அதிநவீன குண்டுகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 50 எஃப்35 போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் விற்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து அப்போது ஜனநாயக […]

Read More