Breaking News

Day: January 27, 2021

பயங்கரவாதிகள் தாக்குதலில் இராணுவ வீரர் வீரமரணம்

January 27, 2021

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலில் மூன்று வீரர்கள் காயமடைந்துள்ளனர்.ஒரு வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். ஷம்ஸிபோரா பகுதியில் உள்ள சுபன்போராவில் ராணுவத்தினர் சோதனை நடத்தி கொண்டிருந்த வேளையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதாவது ராணுவ கான்வாய் செல்லும் முன் சாலைகளில் வெடிகுண்டு உள்ளிட்டவற்றவை வைக்கப்பட்டு இருக்கிறதா என சோதனை நடத்தப்படும் அந்த பணியை வீரர்கள் மேற்கொண்டு இருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது கையெறி வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் […]

Read More

இந்தியா வந்தடைந்தது மேலும் மூன்று ரபேல் விமானங்கள்

January 27, 2021

மேலதிக மூன்று ரபேல் விமானங்கள் சற்று நேரத்திற்கு முன்பு இந்தியா வந்தடைந்துள்ளன.சுமார் 7000கிமீ பறந்து தற்போது அவை இந்தியா வந்தடைந்துள்ளன. இந்தியா தற்போது வந்துள்ளது மூன்றாம் தொகுதி மூன்று ரபேல் விமானங்கள் ஆகும்.ஏற்கனவே இரண்டு தொகுதி விமானங்கள் இந்தியா வந்து அவை விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளது. பிரான்சின் ஸ்ட்ரெஸ் விமானப்படை தளத்தில் இருந்து கிளம்பிய மூன்று ரபேல் விமானங்களும் சற்று முன்பு இந்திய விமானப்படை தளத்தில் தரையிறங்கியுள்ளன. இடையிலேயே நமது ரபேல் விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரக டேங்கர் […]

Read More

முன்னாள் ஐ.எஸ்.ஐ தலைவர் ராவுக்கு பணியாற்றியது அம்பலம் !!

January 27, 2021

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ யின் முன்னாள் தலைவர் லெஃப்டினன்ட் ஜெனரல் ஆசாத் துர்ரானி நமது ராவுக்கு பணியாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவர் மீது இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளதோடு அந்நாட்டு அரசு எக்ஸிட் கண்ட்ரோல் லிஸ்டில் இவரது பெயரை சேர்த்துள்ளது. முன்னாள் ரா தலைவர் தவ்லத் அவர்களுடன் இணைந்து இவர் எழுதிய “ஸ்பை க்ரானிக்கிள்ஸ்” எனும் புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்த கொள்ள இருந்தார். ஆனால் மேற்குறிப்பிட்ட பட்டியலில் இருப்பவர்கள் தேச துரோக குற்றம் சுமத்தப்பட்டவர்கள், அவர்களை […]

Read More

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் ராணுவ வீரர்கள் படுகாயம் !!

January 27, 2021

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷம்ஸிபோரா பகுதியில் உள்ள சுபன்போராவில் ராணுவத்தினர் சோதனை நடத்தினர். அதாவது ராணுவ கான்வாய் செல்லும் முன் சாலைகளில் வெடிகுண்டு உள்ளிட்டவற்றவை வைக்கப்பட்டு இருக்கிறதா என சோதனை நடத்தப்படும் அந்த பணியை வீரர்கள் மேற்கொண்டு இருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது கையெறி வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 24ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படையணியை சேர்ந்த 4 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

Read More

திருச்சி ஆயுத தொழிற்சாலை தயாரித்த “குழந்தை ஏகே47” !!

January 27, 2021

திருச்சி ஆயுத தொழிற்சாலை இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ஆயுதம் தயாரித்து வழங்கும் மிக முக்கியமான தொழிற்சாலைகளில் ஒன்று. தற்போது இவர்கள் குழந்தை ஏகே47 துப்பாக்கியை தயாரித்துள்ளனர், அளவில் மிக சிறியதாக இருக்கும் இதனை எளிதில் மறைத்து கொண்டு செல்ல முடியும். மிக நெருக்கமான பகுதிகளில் சண்டையிட தேவைமான அளவில் இருப்பதோடு மட்டுமில்லாமல் ஏகே47ன் தாக்குதல் திறனையும் கொண்டிருக்கும். இந்த துப்பாக்கி தற்போது ராணுவத்திடம் சோதனைக்காக ஒப்படைக்கப்பட்டு உள்ளதது, சுமார் 2000 தோட்டாக்கள் வரை எவ்வித சிக்கலும் இன்றி […]

Read More