Day: January 23, 2021

தைவான் எல்லையில் ஊடுருவிய சீன விமானப்படை !!

January 23, 2021

தைவான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் சீன விமானப்படை தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவி உள்ளதாகவும், 8 குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் 4 போர் விமானங்கள் அடங்கிய அந்த படையணி வான் பாதுகாப்பு எல்லையை தாண்டி விட்டதாகவும், தற்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தைவானுக்கு மிக அருகே அமெரிக்க விமானந்தாங்கி கப்பலான தியோடர் ருஸ்வெல்ட் இருப்பதால் சிறிது முரட்டுத்தனம் காண்பிக்க சீனா இதனை செய்து […]

Read More

காஷ்மீரில் பயங்கரவாதிகள் மறைவிடம் அழிப்பு

January 23, 2021

ஜம்முவின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இந்த மறைவிடத்தை கண்டுபிடித்து அழித்துள்ளனர். வீரர்களுக்கு கிடைத்த உளவுத் தகவல்கள் அடிப்படையில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், ராஷ்டீரிய ரைபிள்ஸ் வீரர்கள் மற்றும் காஷ்மீர் சிறப்பு காவல் படை வீரர்கள் (மன்டி பகுதி) ஆகிய படைகள் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பூஞ்சின் மன்டி என்ற பகுதியில் இந்த தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.இந்த தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டறியப்பட்டது. மறைவிடத்தில் இருந்து […]

Read More

இலகு பயன்பாட்டு ஹெலிகாப்டரின் தயாரிப்பு விரைவில் துவக்கம் !!

January 23, 2021

இந்திய விமானப்படையிடம் ஆரம்ப பயன்பாட்டு சான்றிதழ் பெற்ற இலகு பயன்பாட்டு ஹெலிகாப்டர் ஒன்று ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள் பல ஆண்டு காலமாக பயன்பாட்டில் இருக்கும் சீட்டா மற்றும் சேத்தக் ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக அமையும். இது குறித்து ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவன தலைவர் பேசிய போது வரும் ஆகஸ்ட் 22 முதல் பெங்களூருவில் தயாரிப்பு பணிகள் துவங்க உள்ளதாக தெரிவித்தார்.

Read More

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி பன்மடங்கு அதிகரிக்கும் !!

January 23, 2021

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைவர் முனைவர் சதீஷ் ரெட்டி சமீபத்தில் இந்திய தொழிற்சாலை கூட்டமைப்பு நிகழ்வில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா கணிசமான அளவில் இறக்குமதியை குறைத்து மிகப்பெரிய அளவில் ஆயுத ஏற்றுமதியை செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் ஒரு நாடு பாதுகாப்பு துறையில் தன்னிறைவு அடைய வேண்டுமானால் தளவாடங்களின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் தயாரிப்பு ஆகியவை உள்நாட்டிலேயே நடக்க வேண்டும் என்றார். அடுத்த 5 ஆண்டுகளில் […]

Read More

கிழக்கில் எத்தகைய சவாலை சந்திக்கவும் தேஸ்பூர் படைதளம் தயார் !!

January 23, 2021

நேற்று அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள முன்னனி விமானப்படை தளமான தேஸ்பூர் தளத்தின் புதிய கட்டளை அதிகாரியாக ஏர் கமோடர் தர்மேந்திர சிங் தாங்கி பொறுப்பேற்று கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தேஸ்பூர் தளம் கிழக்கு எல்லையில் எவ்வித சவாலையும் சமாளிக்க தயாராக இருப்பதாக கூறினார். ஏர் கமோடர் தர்மேந்திர சிங் டைகர் மோத், மிக்21, மிக்27 மற்றும் சுகோய்30 ஆகிய விமானங்களில் விபத்தின்றி சுமார் 3000 மணிநேரம் பறந்த அனுபவம் மிக்இ அதிகாரி ஆவார். மேலும் […]

Read More

இந்திய வானூர்திகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் !!

January 23, 2021

1) தேஜாஸ் மார்க்2 ரஃபேலுக்கு இணையானதாக இருக்கும். 2) ஆம்கா இந்தியாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பு இரட்டை என்ஜின் ஸ்டெல்த் போர் விமானம் ஆகும். 3) ஆசியா, ஆசிய- பஸிஃபிக் மற்றும் ஆஃப்ரிக்க நாடுகள் இந்திய ஹெலிகாப்டர்களில் விருப்பம் தெரிவித்து உள்ளன. 4) இலகு பயன்பாட்டு ஹெலிகாப்டரில் சிவிலியன் ரகம் தயாரிக்கப்படும். 5) வருடத்திற்கு 16 தேஜாஸ் வீதம் தயாரிக்கப்படும். 6) 2024ஆம் ஆண்டுக்கு முன்னர் 10 FOC தேஜாஸ் டெலிவரி செய்யப்படும். 2028-29 க்குள்ளாக 83 […]

Read More

இந்திய கடற்படைக்கு அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிகள் மிகவும் அவசியம் !!

January 23, 2021

தில்லியில் உள்ள மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு கல்வி மற்றும் ஆய்வு கல்லூரியில் உள்ள ஒய்வு பெற்ற கடற்படை அதிகாரியான கமோடர் ராபி தாமஸ் ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் இந்திய கடற்படை ஒர் உண்மையான நீலக்கடல் கடற்படையாக உருமாற்றம் பெற அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் அவசியம் என கூறியுள்ளார். வலிமையான நீலக்கடல் கடற்படையின் அடித்தளமே அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் எனவும், இந்தோ பஸிஃபிக் பிராந்தியத்தில் நிலவும் அதிகார போட்டியை எதிர் கொள்ளவும் இவை […]

Read More

பெண்களை கோப்ரா கமாண்டோ படையில் இணைக்கும் திட்டம் !!

January 23, 2021

முதல் முறையாக மத்திய ரிசர்வ் காவல்படை தனது கோப்ரா படையில் பெண்களை இணைக்க திட்டமிட்டு உள்ளது, இவர்கள் உளவு அடிப்படையிலான பணிகளை மேற்கொள்வர். இது குறித்து மத்திய ரிசர்வ் காவல்படை தலைவர் ஏ பி மகேஸ்வரி கூறுகையில் பெண்கள் ஏற்கனவே சிறப்பாக செயல்படுவதாகவும், தற்போது அவர்களை கோப்ரா படைகளில் இணைக்க உள்ளதாகவும் கூறினார். கோப்ரா படையினர் பெரும்பாலும் நக்சல்பாரி பகுதிகள், வட கிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீரில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More