வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மற்றும் மணிப்பூர் நிலவும் சீரான நல்ல பாதுகாப்பு சூழல் காரணமாக தரைப்படை தனது படைகளை விலக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 3000 வீரர்கள் விலக்கப்பட்ட நிலையில் மேலும் 7000 வீரர்களை இந்த வருட இறுதிக்குள் விலக்க தரைப்படை திட்டமிட்டு உள்ளது. இது குறித்து முன்னாள் வடக்கு கட்டளையக தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் ஹூடா பேசுகையில் இது மிகவும் நல்ல முடிவு எனவும், கிழக்கு கட்டளையகம் எல்லையோர பகுதிகளில் அதிக […]
Read Moreஇந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 10,000 துருப்புகளை சீனாவுடனான எல்லைக்கு அனுப்பி வைக்க தரைப்படை திட்டமிட்டு உள்ளது. இவர்கள் ரிசர்வில் இருக்கும் அதிவிரைவு டிவிஷனை சேர்ந்த துருப்புகள் ஆவர், தேவை ஏற்படும் போது உடனடியாக களமுனைக்கு இவர்கள் அனுப்பி வைக்கப்படுவர். தரைப்படையின் கிழக்கு கட்டளையகம் தற்போது சீன எல்லையில் தனது நடவடிக்கைகளை அதிகரித்து கொள்ள தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Read Moreநேற்று அமெரிக்க செனட் சபையில் பேசிய ஜெனரல் லாய்டு ஜே ஆஸ்டின் இந்தியாவுடன் பாதுகாப்பு உறவை மேம்படுத்த விரும்புவதாக கூறியுள்ளார். மேலும் இந்திய மற்றும் அமெரிக்க ராணுவங்கள் இணைந்து செயல்பட நிறைய இடம் உள்ளதாகவும், க்வாட் (Quad) அமைப்பை வலுப்படுத்த இந்தியவுடனான ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார். இவர் அமெரிக்காவின் அடுத்த பாதுகாப்பு செயலாளர் ஆக பரிந்துரை செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read Moreநேற்று முன்தினம் இந்தியா மற்றும் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்கள் இடையே வீடியோ கான்ஃபரன்சிங் வாயிலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது சிங்கப்பூர் கடற்படையின் நீர்மூழ்கி கப்பல்கள் மூழ்கினால் இந்தியா உதவும் வகையில் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்து ஆகியது. உலகில் ஏறத்தாழ 40 நாடுகள் தங்களது கடற்படைகளில் நீர்மூழ்கி கப்பல்களை இயக்கி வருகின்றன, ஆனால் அதில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில நாடுகளே ஆழ்கடல் மீட்பு வாகனங்களை வைத்துள்ளன. ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை […]
Read Moreஇந்தியா தற்போது தயாரித்துள்ள இரு வகையான கொரோனா தடுப்பு மருந்துகளும் பல நாடுகளில் வரவேற்பை பெற்றுள்ளன. ஏற்கனவே பூட்டான், வங்கதேசம், மாலத்தீவுகள், பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்திய தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் இந்திய கடற்படையின் P8I விமானம் மூலமாக மும்பையில் இருந்து செஷல்ஸ் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளுக்கு இன்று கொரோனா தடுப்பு மருந்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
Read Moreஇந்திய ரஷ்ய கூட்டு தயாரிப்பான பிரம்மாஸ் ஏவுகணை ஏற்கனவே பல்வேறு நாடுகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. ஃபிலிப்பைன்ஸ் பிரம்மாஸ் ஏவுகணைகள் வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எகிப்து நாடும் தற்போது பிரம்மாஸ் ஏவுகணை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read Moreநேற்று காலை சிங்கப்பூர் நாட்டு பதிவு கொண்ட எண்ணெய் கப்பலான எம்.வி ஈகிள் டாம்பா உதவி கோரியது. மும்பையில் இருந்து 18 நாட்டிகல் மைல் தொலைவில் இருந்த கப்பலில் பணியாற்றி வந்த 34 வயதான மலேசி தமிழரான திருமதி. கீதா செல்வராஜா கடுமையான மூச்சு திணறல் காரணமாக அவதிப்படுவதாக கப்பல் தகவல் தெரிவித்தது. இதனையடுத்து இந்திய கடற்படை தனது சீ கிங் ரக ஹெலிகாப்டரை அனுப்பி அவரை பத்திரமாக மீட்டு கரை கொண்டு வந்தது. கடற்படை தளத்தில் […]
Read More