Day: January 21, 2021

பாக் தாக்குதலில் இராணுவ வீரர் வீரமரணம்

January 21, 2021

எல்லையில் பாக் படைகள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே உள்ள கிரிஷ்ண காதி செக்டாரை பாக் படைகள் அத்துமீறி தாக்கின.இந்த தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் லைட் இன்பான்ட்ரி படைப்பிரிவை சேர்ந்த ஹவில்தார் நிர்மல் சிங் அவர்கள் வீரமரணம் அடைந்தார். பாக்கிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்திய படைகள் கடும் பதிலடி கொடுத்து வருகின்றன. வீரவணக்கம் ஹவில்தார் நிர்மல் சிங்

Read More

ஏரோ இந்தியவுக்கு வரும் அதிநவீன அமெரிக்க ரஷ்ய போர் விமானங்கள் !!

January 21, 2021

பெங்களூருவில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே ஏரோ இந்தியா விமான கண்காட்சி அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்காவின் அதிநவீன விமானங்களில் ஒன்றான 1B1 lancer சூப்பர்சானிக் குண்டுவீச்ச விமானமும், மேலும் ரஷ்யா இந்திய ஒரு காலத்தில் இணைந்த உருவாக்கிய சு-57 ஐந்தாம் தலைமுறை போர் விமானமும் வர உள்ளன. இந்த முறை கண்காட்சியில் ரஃபேல் தேஜாஸ் உள்ளிட்டவை இடம்பெறும் என கூறப்படுகிறது.

Read More

வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட புதிய ஏவுகணை !!

January 21, 2021

இன்று ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் இன்று SAAW ஆயுதத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஸ்மார்ட் ஆண்டி ஏர்ஃபீல்டு வெப்பன் எனப்படும் இந்த ஏவுகணை எதிரியின் விமான ஓடு தளங்களை தகர்க்க விமானப்படைக்கு உதவும். பாதுகாப்பு மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த இந்த ஆயுதம் எதிரி விமான தளங்களை நாசமாக்க உதவும். ஒடிசா மாநிலத்தில் ஹாவ்க்-ஐ விமானம் மூலமாக இந்த ஆயுதம் சோதிக்கப்பட்டு உள்ளது.

Read More

இந்தியா வரும் அடுத்த 3 ரஃபேல் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப உள்ள ஐக்கிய அரபு அமீரக விமானப்படை !!

January 21, 2021

இந்த மாத இறுதியில் 3 ரஃபேல் போர் விமானங்கள் படையில் இணைய இந்தியா வர உள்ளன. அவற்றிற்கு வரும் வழியில் இரு முறை ஐக்கிய அரபு அமீரக விமானப்படையின் ஏ330 டேங்கர்கள் எரிபொருள் நிரப்ப உள்ளன. அதை போல ஏப்ரல் மாதம் வர உள்ள அடுத்த 7 ரஃபேல் விமானங்களுக்கும் ஐக்கிய அரபு அமீரக விமானப்படை எரிபொருள் நிரப்ப உள்ளது. இந்தியா ஐக்கிய அரபு அமீரக உறவில் இது புது அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.

Read More

பஞ்சாபில் ஏகே74 துப்பாக்கி மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் !!

January 21, 2021

நேற்று பஞ்சாப் தலைநகர் அமிர்தசரிஸ் நகரில் அம்மாநில காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி கரீன்டா பகுதியில் சோதனை நடத்தப்பட்டது அப்போது 5.2 கிலோ ஹெராயின் ,1 ஏகே74யூ துப்பாக்கி,1 பிஸ்டல் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்ற பட்டன. இதனையடுத்து தொடர்புடையவர்கள் மீது போதை பொருள் மற்றும் ஆயுத சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

தோல்வி அடைந்த ஏவுகணை சோதனையை வெற்றி என கூறி மறைத்த பாக் !!

January 21, 2021

சமீபத்தில் பாகிஸ்தான் ஷாஹீன் – 3 ஏவுகணை சோதனை நடத்தியது, இந்த சோதனை வெற்றி பெற்றதாகவும் பாகிஸ்தான் அறிவித்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் பலூச் குடியரசு கட்சி வெளியிட்ட தகவலின் படி ஷாஹீன் ஏவுகணை தேரா காஸி கான் பகுதியில் ஏவப்பட்டு தேரா பக்டி மட் எனும் இடத்தில் விழுந்ததாகவும், உடனடியாக பாகிஸ்தான் படைகள் அங்கு வந்து ஏவுகணையை வெடிக்க செய்ததாகவும் இதன் காரணமாக அப்பகுதியில் பலத்த பொருட் சேதம் மற்றும் உயிர் சேதம் ஏற்பட்டு உள்ளதாகவும் […]

Read More

பாக் படைகள் மீது தற்கொலை படை தாக்குதல் !!

January 21, 2021

பலூச் மக்கள் நீண்ட காலமாக பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெற போராடி வருகின்றனர், அவ்வப்போது பாக் படைகளுடன் சண்டை இடுவதும் வழக்கம். இந்த நிலையில் இன்று காலை பாகிஸ்தான் படையினர் மீது தற்கொலை படை தாக்குதலை பலூச் விடுதலை ராணுவம் நடத்தி உள்ளது. இதில் 4 பாக் ராணுவ வீரர்கள் வீழ்த்தப்பட்டு உள்ளனர் மேலும் 4 பேர் காயமடைந்து உள்ளனர்

Read More

தேசிய போர் நினைவகத்தில் பொறிக்கப்பட்ட கல்வான் ஹீரோக்களின் பெயர்கள் !!

January 21, 2021

கடந்த ஆண்டு ஜூன்15 அன்று கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன படையினரை வீழ்த்தி வீரமரணம் அடைந்த 20 வீரர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவகத்தில் பொறிக்கப்பட்டு உள்ளன. கடந்த வருடம் பல்வேறு சண்டைகளில் வீர மரணம் அடைந்த 70 வீரர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு அமைச்சகத்தின் நடவடிக்கையை அடுத்து நேற்று வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு உள்ளன.

Read More

மாறும் அமெரிக்க நிர்வாகமும் அதன் கொள்கைகளும் !!

January 21, 2021

நேற்று அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றார், உடன் கமலா ஹாரிஸூம் முதலாவது பெண் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றார். இதனையடுத்து பைடன் நிர்வாகம் முன்னாள் அதிபர் ட்ரம்பின் பல நிர்வாக முடிவுகளை மாற்றி அமைக்க போவதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை பிரதிபலிக்கும் விதமாக திடீரென இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதருடைய ட்விட்டர் கணக்கு இஸ்ரேல், காசா, மேற்கு கரை பகுதிகளுக்கான தூதர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.ஆனால் மீண்டும் உடனடியாக இஸ்ரேல் என […]

Read More

பாகிஸ்தானுடன் ராணுவ உறவை உயிர்ப்பிக்க விரும்பும் ஜோ பைடன் நிர்வாகம் !!

January 21, 2021

அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் பொறுப்பேற்றதை அடுத்து, அடுத்த பாதுகாப்பு செயலராக ஜெனரல் லாய்டு ஜே ஆஸ்டின் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளார். இவர் பாதுகாப்பு செயலர் தேர்வுக்கான செனட் கமிட்டி முன்பு ஆஜராகி பேசினார். அப்போது அமேரிக்க பாகிஸ்தான் உறவு மிக முக்கியமானது குறிப்பாக ஆஃப்கன் சமாதானத்திற்கு தேவையானது எனவும், வருங்கால பாகிஸ்தான் ராணுவ தலைவர்களை சர்வதேச ராணுவ கல்வி மற்றும் நிதியுதவி பயன்படுத்தி பயிற்றுவிக்க விரும்புவதாகவும், அல் காய்தா மற்றும் ஐ.எஸ் இயக்கங்களை வீழ்த்த […]

Read More